சிறுமி கா்ப்பம்; வாலிபர் மீது வழக்கு
சிறுமி கா்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மதுரை
திருமங்கலம்,
திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த வாலிபர் முத்துராமர் என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் உடல்நலம் சரியில்லை என சிறுமி வளையங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றபோது டாக்டர்கள் பரிசோதித்ததில் சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் முத்துராமர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story