சத்தி அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் சாவு


சத்தி அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் சாவு
x

சத்தி அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் சாவு

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே உள்ள பூசாரிபாளையத்தை சேர்ந்தவர் சரண்யா. இவருடைய மகன் நகுல் (வயது 10). இவர் செண்பகப்புதூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நகுலை கடந்த சில தினங்களுக்கு முன்பு காணவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி வந்தனர். ஆனால் அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசில் அவருடைய தாய் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் நகுலை தேடி வந்தனர். இந்த நிலையில் நகுல் தன்னுடைய வீட்டு அருகே உள்ள சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றில் பிணமாக மிதந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், நகுல் கிணற்றுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருக்கும் போது கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story