ஆற்றில் வீசப்பட்ட குழந்தை


ஆற்றில் வீசப்பட்ட குழந்தை
x

பிறந்து சில நாட்களே ஆன நிலையில் ஆற்றில் வீசப்பட்ட குழந்தை உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

திருப்பனந்தாள்;

திருப்பனந்தாள் அருகே உள்ள ஆரலூர் பழவாற்றில் பெண் குழந்தை உடல் கிடப்பதாக பந்தநல்லூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தொப்புள் கொடியுடன் கிடந்த குழந்தை உடலை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தை பிறந்து சில நாட்களே ஆனது தெரியவந்தது. ஆனால் இந்த குழந்தையின் தாய்- தந்தை யார்? அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? குழந்தையை ஆற்றில் வீசி சென்றது யார்? போன்ற விவரங்கள் தெரியவில்லை. இது குறித்து பந்தநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்


Next Story