குழந்தை இயேசு ஆலய திருவிழா கொடியேற்றம்
பாளையங்கோட்டை குழந்தை இயேசு ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருநெல்வேலி
பாளையங்கோட்டை சாந்திநகர் அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட முதன்மை குரு குழந்தை ராஜ் கொடியேற்றினார். இதில் பங்கு அருட்பணி ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். திருவிழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு திருப்பலியும், நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது. வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) 9-வது நாள் திருவிழாவில் குழந்தை இயேசு சப்பர பவனியும், 15-ந் தேதி காலை 7.15 மணிக்கு பிஷப் அந்தோணி சாமி தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெறும். அன்றைய தினம் சிறுவர்-சிறுமிகளுக்கு புதுநன்மை அருட்சாதனம் வழங்கப்படுகிறது.
Related Tags :
Next Story