குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
நீலகிரி
பந்தலூர்
பந்தலூர் அருகே பிதிர்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான டாக்டர் முருகன் உத்தரவுப்படி பந்தலூர் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் குற்றவியல் நீதிபதி சிவகுமார் மேற்பார்வையில் கூடலூர் கூடுதல ்மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரகாசம் தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்தும், குழந்தை திருமண ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் அம்பலமூலா போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, பள்ளி தலைமை ஆசிரியர் மீரா, பந்தலூர் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக உதவியாளர் தினகரன் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story