பீடி நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தக்கூடாது; கலெக்டர் விஷ்ணு உத்தரவு


பீடி நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தக்கூடாது; கலெக்டர் விஷ்ணு உத்தரவு
x

பீடி நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தக்கூடாது என கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பீடி நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், "குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நடவடிக்கையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பீடித்தொழில் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணி அமர்த்துவதை தடுக்க வேண்டும். பீடி சுற்றும் தொழில் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர் யாரும் பணிக்கு அமர்த்தப்படவில்லை என்று வாசகத்தை தெளிவாக அச்சிட்டு தெளிவாக தெரியும் படி ஒட்ட வேண்டும். பீடி பொட்டலங்களிலும் குழந்தை தொழிலாளர்கள் யாரும் பணி அமர்த்தப்படவில்லை என்ற வாசகம் பொருந்திய ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

கூட்டத்தில் தொழிலாளர் துறை இணை ஆணையர் சுமதி, உதவி ஆணையர் (அமலாக்கம்) முருக பிரசன்னா, உதவி ஆய்வாளர்கள் மற்றும் பீடி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story