குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு


குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 13 Jun 2023 12:15 AM IST (Updated: 13 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட அரசு அலுவலகங்கள், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

உறுதிமொழி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பிரசார வாகனத்தையும், விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார். மேலும், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்ற வாகனங்களில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார். நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம்

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு எல்.பாலாஜி சரவணன் தலைமையில் போலீஸ் அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் போலீசார் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சத்தியராஜ், ஜெயராம், இன்ஸ்பெக்டர்கள் ரேனியஸ் ஜேசுபாதம், ஜெரால்டின் வினு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதே போன்று தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆணையர் ச.தினேஷ் குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அனைத்து அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.


Next Story