குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம்
பாவூர்சத்திரம் அருகே குறும்பலாபேரியில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடந்தது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரியில் சமூக பாதுகாப்பு துறை சார்பில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. குலசேகரப்பட்டி பஞ்சாயத்து தலைவி முத்துமாலையம்மாள் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்புத்துறை அலகு புறத்தொடர்பு பணியாளர் அருணாலட்சுமி குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முக்கியத்துவம் குறித்தும், பாவூர்சத்திரம் போலீஸ் செல்வி, குழந்தை திருமணம், போக்சோ சட்டம் குறித்தும், கிராமோதயா தொண்டு நிறுவன தொடர்பு பணியாளர் குணவதி எச்.ஐ.வி. விழிப்புணர்வு குறித்தும் பேசினர். குழந்தை பாதுகாப்பு அவசர உதவி உண் 1098 குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மதனசுந்தரி, பூமா, தேவி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மாடத்தி, கண்ணனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பஞ்சாயத்து துணைத்தலைவி திருவளர்செல்வி நன்றி கூறினார்.