குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
சிவகாசி
சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்ப்ரியா காளிராஜன், கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி கவுன்சிலர் ரவிசங்கர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகி திருப்பதி, குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர் முனி யம்மாள், உறுப்பினர் சதிஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச் சியின் போது அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்தும், பாலியல் பிரச்சினை ஏற்பட்டால் அதுகுறித்து போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் புகார் கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக அரசு வெளியிடும் விழிப்புணர்வு வாசகங்களை அனைத்து இடத்துக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.