குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
புகழூர் நகராட்சி கூட்ட அரங்கில் சிறப்பு குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு புகழூர் நகராட்சித் தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் கனிராஜ் முன்னிலை வைத்தார். கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்குமார் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு அலுவலர் மஞ்சு கலந்து கொண்டு குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விவரமாக எடுத்துக் கூறினார்.
கூட்டத்தில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக திட்டம் செயல்படுத்தப்பட்டு குழந்தைகள் புகார்களை தெரிவிக்க மாவட்ட கலெக்டரால் புதிய வாட்ஸ்-அப் எண் 8903331098 உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வாட்ஸ்-அப் எண்ணிற்கு தகவல் அனுப்பினால் உடனடியாக விசாரணை நடத்தப்படும்.
குழந்தைகள் திருமணத்தை முற்றிலும் தடுக்க 9-ம் முதல் முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு 201 பள்ளிகளில் 1521 பெண் ஆசிரியர்களை கொண்டு பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பள்ளி கட்டிடங்களின் உறுதித் தன்மை குறித்து அவ்வப்போது அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு தக்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மகளிர் கவுன்சிலர்கள், பெண் போலீசார், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.