காயல்பட்டினம் நகரசபையில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்


காயல்பட்டினம் நகரசபையில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
x
தினத்தந்தி 24 Sept 2022 12:15 AM IST (Updated: 24 Sept 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

காயல்பட்டினம் நகரசபையில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் நகராட்சி அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நகரசபை கட்டிடத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகரசபை தலைவர் கே.ஏ.எஸ் முத்து முகமது தலைமை தாங்கினார்.

நகரசபை ஆணையாளர் குமார் சிங், துணைத்தலைவர் சுல்தான் லெப்பை, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரி செல்வி பிலாரன்ஸ், குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரி ஜேம்ஸ் அதிசயராஜ் ஆகியோர் பேசினர்.

நகர சபை தலைவர் விழிப்புணர்வு பலகையை திறந்து வைத்தார். கூட்டத்தில் காயல்பட்டினம் அரசு மருத்துவமனை டாக்டர் ரமீதா, நகரசபை சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார், தொழிலாளர துறை துணை ஆய்வாளர் ராம்மோகன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மகளிர் உதவி குழு உறுப்பினர்கள், குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story