சிறுமி பலாத்காரம்; போக்சோவில் வாலிபர் கைது


சிறுமி பலாத்காரம்; போக்சோவில் வாலிபர் கைது
x

சிறுமி பலாத்காரம் தொடா்பாக போக்சோவில் வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

ஈரோடு

டி.என்.பாளையம்

டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு அறிமுகமில்லாத செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அப்போது செல்போனை எடுத்த சிறுமியிடம் ஆண் ஒருவர் பேசினார். அது தவறான அழைப்பு என தெரிய வந்ததால் செல்போன் அழைப்பை சிறுமி துண்டித்து உள்ளார். இதே செல்போன் எண்ணில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்துள்ளது. இதன் மூலம் அந்த நபருக்கும், சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அந்த நபர் சிறுமியை காதலிப்பதாக கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி வீட்டில் இருந்த சிறுமியை காணவில்லை. இதுகுறித்து பெற்றோர் பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். அப்போது சிறுமியை செல்போனில் பேசிய சேலம் பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் கடத்தி சென்றது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து 2 பேரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த வாலிபர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து சிறுமியை போலீசார் மீட்டனர். மேலும் இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story