குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திரியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ராணிப்பேட்டை
கலவையை அடுத்த திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு துறை, மாவட்டம் குழந்தை பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திமிரி ஒன்றியக்குழு தலைவர் அசோக் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சையத்ஷாநாவாஸ், ஜெயஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமிரி ஒன்றியக் குழு துணைத் தலைவர் ரமேஷ் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர்கள் முறை, பாலியல் வன்முறை, குழந்தை தொழிலாளர், குழந்தைகள் உரிமைச் சட்டம், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் நிஷா, ஒன்றியக் குழு உறுப்பினர் குமார், மகளிர் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கமலக்கண்ணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story