குழந்தைகள் பாதுகாப்புத்திறன் மேம்பாட்டு பயிற்சி


குழந்தைகள் பாதுகாப்புத்திறன் மேம்பாட்டு பயிற்சி
x

விருதுநகரில் குழந்தைகள் பாதுகாப்புத்திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

விருதுநகர்

விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல காவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம் பற்றி விளக்கிப் பேசினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். மேலும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன், குமார், மணிகண்டன், மதுரை சட்டக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர் சிவகுமார் உள்ளிட்ட பலர் குழந்தைகள் பாதுகாப்பு அவசியம் குறித்து பேசினர்.இதில் கலந்து கொண்ட போலீஸ் அதிகாரிகள் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான தங்களது சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொண்டனர்.Next Story