கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு


கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு
x

கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

திருச்சி

சமயபுரம்:

சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜா-செண்பகம் ஆகியோர் தங்களது மகன் ஹரிஷ்(வயது 8), அதே பகுதியை சேர்ந்த லோகநாதன்- மேகலா ஆகியோர் தங்களது மகன் மதன்ராஜ்(8) ஆகியோருடன் கோவிலுக்கு வந்திருந்தனர். இந்நிலையில் பக்தர்களின் கூட்டத்தில் சிறுவர்கள் இரண்டு பேரும் சிக்கிக்கொண்டனர். இதனால் தங்களது பெற்றோர்களை காணாமல் தவித்துக் கொண்டிருந்த 2 பேரையும் சமயபுரம் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்ற இன்ஸ்பெக்டர் கருணாகரன், அவர்களை அமைதிபடுத்தினார். பின்னர் மைக் மூலம் சிறுவர்கள் போலீஸ் நிலையத்தில் இருப்பதை போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த பெற்றோர்களிடம் போலீசார், அந்த சிறுவர்களை ஒப்படைத்தனர்.


Next Story