முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்


முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள்  கல்வி உதவித் தொகை பெற   விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 11 Oct 2022 12:15 AM IST (Updated: 11 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

உதவித் தொகை

மத்திய முப்படை வீரர் வாரியம் மூலம் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு பாரத பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2022-2023-ம் ஆண்டுக்கு அலுவலர் பதவிக்கு கீழ், ஜே.சி.ஓ பதவி வரை பணியாற்றிய முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கு கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.

கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் "ஆன்லைன்" மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கலாம்

12-ம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அல்லது அதற்கு அதிகமாக மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்ற தொழிற்படிப்பு படிக்கும் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் மட்டும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த கல்வி உதவித் தொகை பெறுவதற்கு தகுதி உள்ளவர்கள் 30-11-2022-க்குள் ksb.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்துடன் அனைத்து அசல் ஆவணங்களுடன் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்துக்கு நேரில் வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனரை நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story