யானை-ஒட்டகங்களில் ஏறி அமர்ந்த சிறுவர்கள்


யானை-ஒட்டகங்களில் ஏறி அமர்ந்த சிறுவர்கள்
x
தினத்தந்தி 25 May 2023 12:15 AM IST (Updated: 25 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி சட்டைநாதர் கோவில் குடமுழ்குக்கு வந்திருந்த சிறுவர்கள் யானை-ஒட்டகங்களில் ஏறி அமர்ந்து மகிழ்ந்தனர்

மயிலாடுதுறை

குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த பக்தர்கள் ஏராளமானோர் கோவில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யானை, ஒட்டகங்கள் முன்பு நின்று கொண்டு 'செல்பி' எடுத்துக் கொண்டனர். மேலும் யானை, ஒட்டக பாதுகாவலரிடம் பணத்தை கொடுத்து தங்களுடைய குழந்தைகளை யானை ஒட்டகங்கள் மீது அமர வைத்து செல்போனில் படம் எடுத்துக் கொண்டனர். யானை, ஒட்டகங்கள் மீது அமர்ந்து இருந்த சில குழந்தைகள் மகிழ்ச்சியாக இருந்தன. சில குழந்தைகள் பயத்தால் வீறிட்டு அழுததையும் காண முடிந்தது. இதனால் யானைகள், ஒட்டகங்கள் அருகே அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.


Next Story