பள்ளி திறப்பு நாளில் தேம்பித் தேம்பி அழுத குழந்தைகள்
பள்ளி திறப்பு நாளில் தேம்பித் தேம்பி குழந்தைகள் அழதனர்.
நாகப்பட்டினம்
நீண்ட விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவர்கள் மத்தியில் ஒருவித தயக்கம் காணப்பட்டது. கடந்த கல்வி ஆண்டில் அங்கன்வாடிகளில் படித்து இந்த ஆண்டு பள்ளிகளில் புதிதாக எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளில் சேர்ந்த குழந்தைகள் பெற்றோரை பிரிய மனமின்றி தேம்பித் தேம்பி அழுதனர். அவர்களை சமாதானப்படுத்துவதற்காக ஆசிரியர்கள் அவர்களுக்கு சாக்லெட், பிஸ்கெட், விளையாட்டு பொம்மைகளை கொடுத்தனர். பல பள்ளிகளில் கே.ஜி. வகுப்புகளில் சேரும் குழந்தைகளை கவரும் விதமாக கார்ட்டூன் கதாபாத்திரங்கள் சுவரோவியமாக வரையப்பட்டு இருந்தன.
Related Tags :
Next Story