குழந்தைகள் தின விழா போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
ஓட்டப்பிடாரத்தில் குழந்தைகள் தின விழா போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை போற்றுவோம் என்ற கருத்தை மையமாக வைத்து வ.உ.சிதம்பரனார் அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் மேரி வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ மாணவர்களுக்கு இடையேயான கபடி போட்டி மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். மேலும், விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு எம்.எல்.ஏ பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் வட்டார சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் சங்கரேஸ்வரி,
சமூக நலத்துறை கிராம சேவகர் செல்வி, போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், கொடியங்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார் உட்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.