'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தில் சிறுவர் பூங்கா


நம்ம ஊரு சூப்பரு திட்டத்தில் சிறுவர் பூங்கா
x

அம்பலூர் ஊராட்சியில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தில் சிறுவர் பூங்காIT கலெக்டர் பாஸ்கரபாண்டியன் திறந்து வைத்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் அம்பலூர் ஊராட்சியின் சார்பில் 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் திறந்து வைத்து பார்வையிட்டார். விளையாட்டு பிரிவை அங்கு வந்திருந்த குழந்தைகளை வைத்து திறந்து வைத்தார்.

மேலும் அம்பலூர் ஊராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவில் ஆலமரம், அரசமரம் ஆகிய மரக்கன்றுகளை நட்டு 1000 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, அம்பலூர் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் அமைக்கப்பட்டுள்ள சமுதாய கிடை உறிஞ்சிக்குழி பணியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது உதவி இயக்குனர் ஊராட்சிகள் விஜயகுமாரி, உதவி திட்ட அலுவலர் இராமசேகரகுப்தா, வட்டார வளர்ச்சி அலுவலர் சதானந்தம், ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி. முருகேசன், கவுன்சிலர் செந்தில்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story