குழந்தைகள் சிகிச்சை முகாம்
புளியங்குடியில் இலவச குழந்தைகள் நல இருதய சிகிச்சை முகாம் நடந்தது
தென்காசி
புளியங்குடி:
புளியங்குடி செயின்ட் மேரிஸ் பொது மற்றும் மகப்பேறு மருத்துவமனையில் மதுரை அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து குழந்தைகளுக்கான இலவச சிறப்பு இருதய சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு செயின்ட் மேரிஸ் மருத்துவமனையின் தலைமை டாக்டர் சேவியர் தலைமை தாங்கினார். டாக்டர்கள் செந்தில்குமார், ஜோஸ் ஆண்ட்ரு வளன் ராய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு இலவசமாக இருதய ஸ்கேன் மற்றும் மூச்சுவிடும் திறன் போன்ற இதர பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முகாமில் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து சிகிச்சை பெற்றனர்.
Related Tags :
Next Story