சாமுண்டீஸ்வரி கோவிலில் மிளகாய் சண்டி யாகம்
சாமுண்டீஸ்வரி கோவிலில் மிளகாய் சண்டி யாகம் நடந்தது.
அரியலூர்
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்டம், பொய்யாதநல்லூர் கிராமத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் சண்டி யாகம் நடைபெற்றது. யாகத்தில் பக்தர்கள் வேண்டுதலின்பேரில் சேலைகள், மிளகாய் வத்தல்கள் இடப்பட்டன. பின்னர் பல்வேறு வகையிலான மூலிகைகள், முக்கனிகள் உள்ளிட்ட பழங்கள் யாகத்தில் போடப்பட்டன. தொடர்ந்து பூஜை செய்யப்பட்ட கலசங்களில் இருந்து புனித நீரால் விநாயகர், சாமுண்டீஸ்வரி அம்மன், முருகப்பெருமான், பிரத்தியங்கரா தேவி, கால பைரவர், கருப்புசாமி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
Related Tags :
Next Story