விவசாயிகளுக்கு மிளகாய் பயிர் உயர்சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
கோவில்பட்டியில் விவசாயிகளுக்கு மிளகாய் பயிர் உயர்சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் கோழிக்கோடு பாக்கு மற்றும் நறுமண பயிர்கள் வளர்ச்சி இயக்குனரகம் இணைந்து நடத்திய விவசாயிகளுக்கான மிளகாய் பயிர் உயர் சாகுபடி தொழில் நுட்பங்கள் பற்றிய பயிற்சி நடந்தது. பயிற்சியில் பிச்சைத் தலைவன் பட்டி, தர்மத்துப்பட்டி விளாத்திகுளம், வடக்குப்பட்டி, சாத்தூர், மற்றும் நரிக்குடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பயிற்சிக்கு வேளாண்மை ஆராய்ச்சி நிலைய தலைவர் கோ. பாஸ்கர் தலைமை வகித்உதவி பேராசிரியர் வி. சஞ்சிவ் குமார் வரவேற்றுப் பேசினார். பயிற்சியில் தோட்டக்கலை உதவி இயக்குனர் ஏ.மலர், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் கே சுரேஷ் ராமலிங்கம், இணைப் பேராசிரியர் கு. குரு, உதவி பேராசிரியர் மனோகரன் ஆகியோர் பேசினர். சிறப்பு விருந்தினராக வேளாண்மை துணை இயக்குனர் ஏ. நாச்சியாரம்மாள் கலந்து கொண்டு மாவட்ட அளவிலான வேளாண்மை திட்டங்கள் பற்றி விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மிளகாய் பயிர் உயர் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றிய கையேட்டினை ஆராய்ச்சி நிலைய தலைவர் பாஸ்கர் வழங்கினார்.