பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி தங்க சங்கிலி பறிப்பு

பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி தங்க சங்கிலி பறிப்பு
x

பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி தங்க சங்கிலி பறிப்பு

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி தீபா(வயது 46). இவர்களது மகள் ஆர்த்தி வீட்டில் தனியாக இருந்த போது வீட்டிற்குள் புகுந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆர்த்தியின் முகத்தில் மிளகாய் பொடி வீசி அவர் கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இச்சம்பவம் குறித்து தீபா தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்த பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story