பெண்ணிடம் மது போதையில் சில்மிஷம்


பெண்ணிடம் மது போதையில் சில்மிஷம்
x
தினத்தந்தி 4 Jan 2023 12:15 AM IST (Updated: 4 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே பெண்ணிடம் மது போதையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை, பெண்ணின் குடும்பத்தினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் அருகே பெண்ணிடம் மது போதையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை, பெண்ணின் குடும்பத்தினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பெண்ணிடம் சில்மிஷம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் அண்ணா நகரை சேர்ந்தவர் ஞானதாஸ் (வயது 34). திருமணமாகாதவர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று ஞானதாஸ் மதுபோதையில் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். பின்னர் திடீரென ஒரு வீட்டுக்குள் நுழைந்தார்.

அங்கு திருமணமான 28 வயது பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் இருந்தனர். அப்போது ஞானதாஸ் மது போதையில் திடீரென அந்த பெண்ணை கட்டிப்பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிட்டார். உடனே வீட்டில் இருந்தவர்கள் போதையில் தள்ளாடிய ஞானதாசை பிடித்து வெலிங்டன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

வாலிபர் கைது

இதுகுறித்து அந்த பெண் வெலிங்டன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஞானதாசிடம் விசாரணை நடத்தினார். இதில் மது போதையில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து தகாத வார்த்தையில் பேசுதல், வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், மானபங்கப்படுத்துதல், மிரட்டுதல் என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஞானதாசை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் குன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குன்னூர் அருகே வீட்டில் குடும்பத்தினருடன் இருந்த பெண்ணிடம் மதுபோதையில் இருந்த வாலிபர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story