பண்டாரவிளையில் சிலம்பம் போட்டி: நாசரேத் அணி வெற்றி
பண்டாரவிளையில் நடந்த சிலம்பம் போட்டியில் நாசரேத் அணி வெற்றி பெற்றது.
ஏரல்:
பண்டாரவிளை பயில்வான் பொன்னையா நாடார் நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி இந்து நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த போட்டிக்கு பெருங்குளம் பேரூராட்சி துணைத் தலைவர் சந்திரபால் தலைமை தாங்கினார். பேரூராட்சி முன்னாள் தலைவர் சிவகுமார் போட்டியை தொடங்கி வைத்தார். இப்போட்டியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட சிலம்ப மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் முதலாவது பரிசை நாசரேத் ஆலன் திலக் சிலம்ப அணியும், 2-வது பரிசை புதுக்கோட்டை பாரதி சிலம்ப அணியும், 3-வது பரிசை ஸ்ரீவைகுண்டம் நேதாஜி சிலம்ப அணியும், 4-வது பரிசை கோவில்பட்டி சிலம்ப அணியும் வெற்றி பெற்றது.முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் எஸ். பி.சண்முகநாதன் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார். இவ்விழாவில் ஆழ்வார்திருநகரி அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், பெருங்குளம் பேரூராட்சி செயலாளர் வேதமாணிக்கம், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் எப்ராயம், தீயணைப்புத்துறை உதவி ஆய்வாளர் எஸ்.எம்.பாஷா, பேரூராட்சி கவுன்சிலர்கள் பட்டுப்பாண்டி, மாயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.போட்டிக்கான ஏற்பாட்டை மாஸ்டர் நாசரேத் டென்னிசன் செய்திருந்தார்.