சின்னமனூர், ராசிங்காபுரம் பகுதிகளில்இன்று மின்சாரம் நிறுத்தம்
சின்னமனூர், ராசிங்காபுரம் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
தேனி
ராசிங்காபுரம், மார்க்கையன்கோட்டை துணை மின் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதையொட்டி, மார்க்கையன்கோட்டை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, அய்யம்பட்டி, புலிகுத்தி, கீழசிந்தலைச்சேரி, மேலசிந்தலைச்சேரி, பல்லவராயன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
ராசிங்காபுரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட ராசிங்காபுரம், சிலமலை, டி.ஆர்.புரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story