ஆனி மாத அமாவாசையையொட்டிகஞ்சமலை சித்தேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
இளம்பிள்ளை
இளம்பிள்ளை அருகே உள்ள கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவிலில் ஆனி மாத அமாவாசைையயொட்டி, நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சித்தேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன. இதையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்து புனித தீர்த்தக்குளங்களில் நீராடினர். பின்னர் அங்கு உள்ள காந்த தீர்த்தக்குளத்தில் பக்தர்கள் மரு, போன்ற தோல் வியாதிகள் நீங்க வேண்டி உப்பு, மிளகு, வெல்லம் கொண்டு வந்து தலையை சுற்றி போட்டு வேண்டி கொண்டு சித்தேஸ்வரரை வணங்கி சென்றனர்.
இதேபோல் அருகில் உள்ள காளியம்மன், பாலமுருகன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில், சேலம் மட்டுமின்றி ஈரோடு, தர்மபுரி ஆகிய பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சித்தேஸ்வரரை தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் குமரவேல் செய்து இருந்தார்.