வீரமனோகரி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
குலசேகரன்பட்டினம் வீரமனோகரி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் வடக்கூர் வீர மனோகரி அம்மன் கோவில், தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு வருடம் தோறும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று காலை 7 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கொடி மரத்துக்கு சந்தனம், பன்னீர், குங்குமம், விபூதி, நெய், இளநீர் உட்பட பல்வேறு அபிேஷகங்களும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. 10-ம் திருநாளான 23-ந் தேதி அன்று திருவிழா நிறைவு பூஜை நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் அ.வீரபாகு வல்லவராயர் செய்து வருகிறார்.