கதவுமலை சிவன் கோவிலில் சித்திரை திருவிழா
தாண்டிக்குடி அருகே கவுதமலை சிவன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது.
கொடைக்கானல் கீழ்மலை, தாண்டிக்குடி அருகே அசன்கொடை மலை உச்சியில் கதவுமலையில் குகைக்குள் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று திருவிழா நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்தனர். பின்னர் மஞ்சள், அரிசி மாவு, பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தானம், விபூதி, பன்னீர், தீர்த்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் தாண்டிக்குடி பாலமுருகன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து, அபிஷேகம் செய்தனர். பின்னர் முருகனுக்கு மஞ்சள், திருமஞ்சனம், அரிசி மாவு, பால், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.