காத்தாயி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
மன்னார்குடி காத்தாயி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
திருவாரூர்
மன்னார்குடி:
மன்னார்குடியில் காத்தாயி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 12-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம், திருமகள் அலங்காரம், திருக்கல்யாணம் மற்றும் நாள்தோறும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு காவடி எடுத்தும் அம்மனுக்கு தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
Related Tags :
Next Story