மகாமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா


மகாமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
x

சுவாமிமலை அருகே மகாமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்:

சுவாமிமலை அருகே சுந்தர பெருமாள் கோவில் மகா மாரியம்மன் ஆலயத்தின் சித்திரை திருவிழா நடைபெற்றது. .முன்னதாக பக்தர்கள் அரசலாற்றங்கரையில் இருந்து பால்குடம், அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனை தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சுந்தர பெருமாள் கோவில் கிராம நாட்டாமைகள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.


Next Story