நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா


நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா
x
தினத்தந்தி 30 April 2023 12:15 AM IST (Updated: 30 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாகப்பட்டினம்

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் சித்திரை பிரமோற்சவ விழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நேற்று முன்தினம் காலை திருச்சாந்து சாத்தி ருத்ராபிஷேகமும், இரவு பூச்சொரிதல் விழாவும் நடந்தது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து இரவு சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அம்மன் மயில்வாகனத்திலும், இரவு வேணுகோபால் அவதாரத்திலும் வீதி உலா நடைபெறும். விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்கள் அம்மன் வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 7-ந் தேதி அதிகாலையிலும், காலை 7 மணிக்கு செடில் உற்சவமும் நடைபெறுகிறது. 8-ந் தேதி காலை தீர்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சியுடன் கொடி இறக்கப்படுகிறது. 10-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும், 12-ந் தேதி இரவு புஷ்பபல்லக்கு நிகழ்ச்சியும், 14-ந் தேதி உதிரவாய் துடைப்பு நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெறுகிறது.

--


Next Story