அட்சயலிங்க சாமி கோவிலில் சித்திரை உற்சவ விழா


அட்சயலிங்க சாமி கோவிலில் சித்திரை உற்சவ விழா
x
தினத்தந்தி 7 May 2023 12:15 AM IST (Updated: 7 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அட்சயலிங்க சாமி கோவிலில் சித்திரை உற்சவ விழா நடந்தது.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூரில் அட்சயலிங்க சாமி கோவிலில் சித்திரை ஏகதின உற்சவம் கடந்த 1-ந்தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. 4-ந்தேதி காலை பஞ்ச மூர்த்திகள் அபிஷேக ஆராதனையும், தீர்த்தோற்சவம் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு ஓலைச் சப்பரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் கல்யாணசுந்தரர், அம்மன் மற்றும் மூஞ்சூர் வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் முருகன், சண்டிகேஸ்வரர் மஞ்சத்தில் வீதி உலா காட்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று சப்ஸ்தான பல்லாக்கில் கல்யாணசுந்தரர், அம்மன் வீதி உலா காட்சியும், இன்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு கோவில் முன்பு உள்ள சரவண பொய்கை திருக்குளத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது..விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கிராம மக்கள் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.


Next Story