சுப்பிரமணிய சாமி கோவிலில் சித்ராபவுர்ணமி வழிபாடு


சுப்பிரமணிய சாமி கோவிலில் சித்ராபவுர்ணமி வழிபாடு
x
தினத்தந்தி 7 May 2023 12:15 AM IST (Updated: 7 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் அருகே கருணாவூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் சித்ராபவுர்ணமி வழிபாடு நட்நதது

திருவாரூர்

கோட்டூர்:

கோட்டூர் அருகே உள்ள சுப்பிரமணிய சாமி கோவிலில் சித்ராபவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.

சுப்பிரமணிய சாமி கோவில்

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே கருணாவூரில் சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. புராதன சிறப்புவாய்ந்த இந்த கோவில் முருகனின் அறுபடை வீடுகளுக்கு நிகரான சிறப்புக்கொண்ட பிரார்த்தனைதலமாக விளங்கிவருகிறது. பல்வேறு சிறப்புகளைக்கொண்ட இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

பால்குடம்

இந்த சித்ரா பவுர்ணமி வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பால்குடங்களை சுமந்து முக்கிய வீதிகள் வழியாக திருக்கோவிலை அடைந்தனர். இதனை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு மஞ்சள், திரவியப்பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் முதலான வாசனை பொருட்களைக்கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் செடில்காவடி, அலகு காவடி, மின்னொலி அலங்காரத்தில் மிளிரிய கண்கவரும் காவடிகளை சுமந்து சுப்பிரமணிய சுவாமிக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பின்னர் முருகப்பெருமானுக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சண்முகா அர்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story