சோழமண்டல அளவிலான சதுரங்க போட்டி
பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் சோழமண்டல அளவிலான சதுரங்க போட்டி நடந்தது.
திருவாரூர்
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் வட்டம் பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவிலில் திருவாரூர் மாவட்ட சதுரங்க கழகம், நீடாமங்கலம் வட்ட சதுரங்க கழகம், பூவனூர் ஊராட்சி ஆகியவை இணைந்து சோழமண்டல அளவிலான சதுரங்க போட்டி நடத்தியது. இந்த போட்டியில் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர், மற்றும் பொதுபிரிவு விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் .வெற்றி பெற்றவர்களுக்கு கோவில் தக்கார் மாதவன், மன்னார்குடி தியாகராஜன், ராயபுரம் மருத்துவ அலுவலர் திருஒளி,, திருவாரூர் மாவட்ட சதுரங்க தலைவர் என்.சாந்தகுமார் மற்றும் பலர் பரிசுகளை வழங்கினர். முன்னதாக சதுரங்கவல்லபநாதர், சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
Related Tags :
Next Story