உத்தமபாளையத்தில் நவீன விளையாட்டு அரங்கம் அமைக்க இடம் தேர்வு


உத்தமபாளையத்தில் நவீன விளையாட்டு அரங்கம் அமைக்க இடம் தேர்வு
x

உத்தமபாளையத்தில் நவீன விளையாட்டு அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தேனி

உத்தமபாளையத்தில் போலீஸ், ராணுவ பணிகளுக்கு தயாராகும் மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு அரங்கம் மற்றும் நடைபயிற்சி பூங்கா அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது.

இதற்கிடையே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., உத்தமபாளையத்தில் விளையாட்டு அரங்கம் மற்றும் நடைபயிற்சி பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி, உத்தமபாளையத்தில் நவீன விளையாட்டு அரங்கம் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து நவீன விளையாட்டு அரங்கம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.

இதில், உத்தமபாளையம் தாசில்தார் அர்ச்சுனன் தலைமையில் துணை தாசில்தார்கள் கண்ணன், முருகன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டு இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி, உத்தமபாளையத்தில் இருந்து கோம்பை செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு, அங்கு விளையாட்டு அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

இங்கு பல்வேறு வகை விளையாட்டுகளுக்கு தனித்தனியாக உள்ளரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று அரசுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story