கிறிஸ்தவ சுவிசேஷ பெருவிழா
கிறிஸ்தவ சுவிசேஷ பெருவிழா நடந்தது.
ஈரோடு சென்னிமலை ரோடு, பெரிய தோட்டத்தில் உள்ள ஏசு கிறிஸ்துவைப் பின்பற்றுவோர் சபையின் (எப்.ஓ.சி. திருச்சபை) 50-ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாபெரும் சுவிசேஷ பெருவிழா ஈரோட்டில் நேற்று தொடங்கியது. ஈரோடு பிரப் ரோடு, சி.எஸ்.ஐ. பிரப் திருச்சபை அரங்கில் தினசரி மாலை 6 மணிக்கு நடைபெற்று வரும் சிறப்பு பிரார்த்தனை பெருவிழாவில், சென்னை ப்ரெடி ஜோசப் ஊழியங்களின் தலைமை போதகர் ப்ரெடி ஜோசப் கலந்துகொண்டு தேவ செய்தியையும், விசேஷித்த ஜெபத்தையும் ஏறெடுக்கிறார்.
சுவிசேஷ பெருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஏசு கிறிஸ்துவை பின்பற்றுவோர் சபையின் தலைமை போதகர் டி.ஜோ டேவிட் மற்றும் சபை மக்கள் செய்து வருகிறார்கள். பிரார்த்தனை பெருவிழாவில் சபை போதகர்கள் எட்வின் சத்தியநாதன், பால் கிறிஸ்டோபர், யோபு, ராஜேஷ், ஆலன் சுரேஷ், ஸ்டேன்லி, எட்வின் குமார், பால்ராஜ், அன்பரசன், இருதயராஜ், கமல்பாபு உட்பட மாவட்டத்தின் பல்வேறு திருச்சபைகளின் கிறிஸ்தவ போதகர்கள் கலந்து கொள்கிறார்கள்.