குருத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி உடுமலையில் ஓசன்னா கீதம் பாடி குருத்தோலை பவனி வந்தனர்.
குருத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி உடுமலையில் ஓசன்னா கீதம் பாடி குருத்தோலை பவனி வந்தனர்.
போடிப்பட்டி
குருத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி உடுமலையில் ஓசன்னா கீதம் பாடி குருத்தோலை பவனி வந்தனர்.
தவக்காலம்
சாம்பல் புதனுடன் தொடங்கிய கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை வரும் 9-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகைக்காக தொடர்ந்து 7 வாரங்கள் தவக்காலம் கடைபிடித்து வரும் கிறிஸ்தவர்கள் நேற்று குருத்தோலை ஞாயிறு தினத்தை கொண்டாடினார்கள்.
சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஜெருசலேம் நகரில் பவனி வந்த இயேசு கிறிஸ்துவை அங்கிருந்த மக்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி 'தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா' என்று கூறி வரவேற்றார்கள். அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் உடுமலையில் குருத்தோலை பவனி நடைபெற்றது.
குருத்தோலை
உடுமலை இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெற்ற குருத்தோலை பவனியில் திருச்சபை ஆயர்கள் மேரி செல்வராணி, உதவி ஆயர் லூதர் சேகர, செயளாலர் பால் ஜெயசந்திரன், பொருளாளர் ஜெயக்குமார், சேகரக்குழு உறுப்பினர்கள், பாடகர் குழுவினர் மற்றும் பெண்கள் ஐக்கிய சங்கம், ஆண்கள் ஐக்கிய சங்கம், ஞாயிறு பள்ளி குழந்தைகள் திருச்சபை மக்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
பவனியில் கைகளில் குருத்தோலை ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்த அனைவரும் ஓசன்னா கீதம் பாடி 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வை நினைவு கூர்ந்தனர்.இதுபோல உடுமலை சி.எஸ.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் நடைபெற்ற குருத்தோலை பவனியில் ரெவரென்ட் செல்வராஜ், பொருளாளர் டாக்டர் ராஜசேகர், செயலாளர் டாக்டர் விலிங்க்டன் ஜெபராஜ் மற்றும் ஏராளமானவர்கள் குருத்தோலைகளுடன் பவனியில் கலந்து கொண்டனர்.