கிறிஸ்டியாநகரம் தூயமாற்கு ஆலயத்தில் பிரதிஷ்டை அசன விழா: சனிக்கிழமை நடக்கிறது
கிறிஸ்டியாநகரம் தூயமாற்கு ஆலயத்தில் பிரதிஷ்டை அசன விழா சனிக்கிழமை நடக்கிறது
உடன்குடி:
உடன்குடி கிறிஸ்தியாநகரம் தூயமாற்கு ஆலயத்தின் 175-வது பிரதிஷ்டை மற்றும் அசனபண்டிகை விழா கடந்த 20-ந் தேதி மாலையில் ஜெயபவனியுடன் தொடங்கியது. பரிபாலனர் ஞானராஜ் கோயில்பிள்ளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இரவு 7 மணிக்கு நற்செய்தி பெருவிழாநடந்தது, ஆண்கள் ஆக்கிய சங்க விழா உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வந்தன. நேற்று காலை 8 மணிக்கு மிஷினரி விற்பனை விழா, மாலை 6 மணிக்கு ஆயத்த ஆராதனை நடந்தது. இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு பிரதிஷ்டை பன்டிகை ஆராதனை, சிறப்பு நற்செய்தி வழங்கல் நடக்கிறது. தொடர்ந்து தங்க நாணயங்கள் வெளியீடு, சிறப்பு மலர்கள் வெளியீடும், மாலை 5 மணிக்கு அசன விருந்து நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை, நாளை ( ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு ஸ்தோத்திர ஆராதனை, மதியம் 12 மணிக்கு வேத பாட தேர்வு, மாலை 4 மணிக்கு ஞானஸ்தான, ஆராதனை, இரவு 7 மணிக்கு தியாக சுடர் என்ற வரலாற்று நாடகம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை சேகரகுருவானவர் பாஸ்கர் அல்பட்ராஜன் கவுரவ குருவானர் ஷீபா பாஸ்கர், உதவி குருவானவர் ஜெபத்துரை, சபை ஊழியர் ஆனந்த மணி. பரிபாலனர் ஞான்ராஜ் கோவில் பிள்ளை, தலைவர் பால்ராஜ் செயலாளர் பிரின்ஸ் பொருளாளர் ஜெபஸ்டின் ஜோசப், ஒருங்கிணைப்பாளர் செபஸ்டின் ஆண்ட்ரூஸ் மற்றும் சபை மக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.