திருப்பூர் அருகே திருச்சபை கட்டிடம் கட்ட அனுமதிக்கக்கோரி கிறிஸ்தவர்கள் நேற்று கலெக்டரை சந்தித்து முறையிட்டனர். முதல்-அமைச்சரை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனர்.

திருப்பூர் அருகே திருச்சபை கட்டிடம் கட்ட அனுமதிக்கக்கோரி கிறிஸ்தவர்கள் நேற்று கலெக்டரை சந்தித்து முறையிட்டனர். முதல்-அமைச்சரை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனர்.
x

திருப்பூர் அருகே திருச்சபை கட்டிடம் கட்ட அனுமதிக்கக்கோரி கிறிஸ்தவர்கள் நேற்று கலெக்டரை சந்தித்து முறையிட்டனர். முதல்-அமைச்சரை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனர்.

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் அருகே திருச்சபை கட்டிடம் கட்ட அனுமதிக்கக்கோரி கிறிஸ்தவர்கள் நேற்று கலெக்டரை சந்தித்து முறையிட்டனர். முதல்-அமைச்சரை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனர்.

திருச்சபை கட்டிடம்

திருப்பூர் மண்ணரை பகுதியை சேர்ந்தவர் அருண் அந்தோணி. கிறிஸ்தவ போதகரான இவர் அதே பகுதியில் பெத்தேல் ஏ.ஜி.சபை என்ற திருச்சபையை நடத்தி வருகிறார். இந்தநிலையில் சபைக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு கடந்த 2021-ம் ஆண்டு ஊத்துக்குளி ரோடு சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் சொந்தமாக இடம் வாங்கி, சுற்றுச்சுவர் கட்டுமான பணி தொடங்கியபோது ஒருபகுதியினர் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தினார்கள்.

இதையடுத்து போதகர் அருண் அந்தோணி தலைமையில் கலெக்டர், வருவாய்த்துறை அதிகாரிகளை பலமுறை சந்தித்து முறையிட்டும் திருச்சபை கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் விடிய, விடிய தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார்கள். இந்தநிலையில் திருச்சபை கட்டிடம் கட்ட அனுமதி வழங்கக்கோரி வேன் மூலமாக திருப்பூரில் இருந்து போதகர் தலைமையில் 44 பேர் சென்னை சென்றனர். தலைமை செயலகத்தில் மனு கொடுக்க சென்றனர். அதற்குள் அங்கிருந்த போலீசார் அவர்களை காவல்துறை வாகனம் மூலம் திருப்பூருக்கு அழைத்து வந்தனர். மாவட்ட நிர்வாகத்திடம் பேசி தீர்க்குமாறு அறிவுறுத்தினார்கள்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஆனால் திருப்பூர் மண்ணரைக்கு நேற்று முன்தினம் இரவு காவல்துறை வாகனத்தில் வந்தவர்கள், வாகனத்தில் இருந்து இறங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடிய, விடிய போராட்டம் நடந்தது. காவல்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் தொடர்ந்தது. அதிகாலை 3 மணிக்கு அவர்களை நல்லூரில் உள்ள சமுதாய நல கூடத்தில் தங்க வைத்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிட முடிவு செய்தனர். முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலெக்டரை சந்தித்து பேச அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக திருப்பூர் கலெக்டர் அலுவலக நுழைவுவாசல், கலெக்டர் அலுவலகம் சுற்றியுள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மதியம் 12 மணி அளவில் திருச்சபை மக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். நுழைவுவாசலில் அவர்களை நிறுத்திய போலீசார் முக்கிய நிர்வாகிகளை உள்ளே செல்ல அனுமதித்தனர்.

முதல்-அமைச்சரிடம் முறையிட முடிவு

போதகர் அருண் அந்தோணி, அவரது மனைவி மற்றும் போதகர் செல்வராஜ் ஆகியோர் கலெக்டர் வினீத்தை சந்தித்து பேசினார்கள். மாநகர, மாவட்ட போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர். சம்பந்தப்பட்ட இடத்தில் திருச்சபை கட்டுவதற்கு அனுமதி இல்லை என்று ஏற்கனவே கலெக்டர் தெரிவித்து இருந்தார். தான் வழங்கிய உத்தரவில் திருப்தி இல்லாத பட்சத்தில் கோர்ட்டில் முறையிடலாம் என்று கலெக்டர் தெரிவித்தார். இதையடுத்து போதகர் தரப்பினர் முதல்-அமைச்சரை சந்தித்து முறையிட உள்ளதாக தெரிவித்தனர். அது உங்கள் விருப்பம் என்று கலெக்டர் தெரிவித்ததை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

Next Story