கிறிஸ்துமஸ் கீத பவனி


கிறிஸ்துமஸ் கீத பவனி
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்துமஸ் கீத பவனி நடந்தது.

நீலகிரி

குன்னூர்,

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளில் நட்சத்திரம் (ஸ்டார்கள்), கிறிஸ்துமஸ் மரம் மற்றும் இயேசு பிறப்பு குறித்து குடில் அமைத்து உள்ளனர். மேலும் ஆலயங்கள் சார்பில், இயேசு கிறிஸ்து பிறப்பை பாடல்கள் மூலம் வீடுகள் தோறும் சென்று அறிவித்து வருகிறார்கள். ரோமன் கத்தோலிக்க திருச்சபை மற்றும் சி.எஸ்.ஐ. ஆலயங்கள் சார்பில், கிறிஸ்துமஸ் கீத பவனி பங்கு மக்கள் வீடுகள் தோறும் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக குன்னூர் அந்தோணியார் ஆலயம் சார்பில், கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு சென்று இயேசு கிறிஸ்து பிறப்பு குறித்து பாடல்கள் மூலம் அறிவித்து, வாழ்த்து தெரிவித்தனர். அப்போது கிறிஸ்துமஸ் தாத்தா (சாண்டாகிளாஸ்) வேடமணிந்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் பங்கு தந்தை ஜெயக்குமார், உதவி பங்கு தந்தை மெல்டோஸ் மற்றும் பாடல் குழுவினர் கலந்துகொண்டனர். இதேபோல் குன்னூர் சி.எஸ்.ஐ. வெஸ்லி ஆலய பங்கு குரு ரோட்ரிக்ஸ் பர்னபாஸ் தலைமையில் பாடல் குழுவினர் கிறிஸ்துமஸ் கீத பவனி சென்று வருகின்றனர்.


Next Story