கழுகுமலையில்தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா
கழுகுமலையில்தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி
கழுகுமலை:
கழுகுமலையில் ஆர்.சி. தேவாலயம் மற்றும் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு அழகிய மின் நட்சத்திரங்கள் தொங்க விடப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்களின் வீடுகளிலும் இயேசு கிறிஸ்து பிறப்பை வரவேற்கும் விதமாக வண்ண, வண்ண குடில்கள் அமைக்கப்பட்டு மின் நட்சத்திரங்களை வீட்டு வாசலில் தொங்கவிட்டுள்ளனர். மேலும் ஆர்.சி. தேவாலயத்தில் பஜனை குழுவினர் அதிகாலையில் பாடல்கள் பாடியவாறு இசை முழக்கத்துடன் வலம் வருகின்றனர். இதே போல் சி.எஸ்.ஐ. தேவாலயத்திலும் கேரல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கழுகுமலை பகுதியில் உள்ள பேக்கரி கடைகளில் கிறிஸ்துமஸ் கேக்குகள் அழகிய வடிவில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளில் ேகக்குகள் விற்பனை களை கட்டியுள்ளது.
Related Tags :
Next Story