கொசவபட்டியில் புனித ஞானபிரகாசியார் ஆலய திருவிழா
கொசவபட்டியில் புனித ஞானபிரகாசியார் ஆலய திருவிழா நடைபெற்றது.
திண்டுக்கல்
சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் புனித ஞானபிரகாசியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் திருவிழா, கடந்த மாதம் 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இதைத்தொடர்ந்து தினமும் நவநாள் திருப்பலி நடந்தது. திருவிழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் புனிதரின் திருப்பலி, நற்கருணை பெருவிழா திருப்பலி ஆகியவை நடைபெற்றது.
அதன்பிறகு இரவில் ஞானபிரகாசியாரின் மின்தேர் பவனி நடந்தது. கொசவபட்டி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக மின்தேர் பவனி வந்தது. அத்துடன் திருவிழா நிறைவடைந்தது. இதில், கொசவபட்டி ஊர்பெரியதனக்காரர்கள், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story