ஆலய கதவை உடைத்து மின்சாதன பொருட்கள் திருட்டு


ஆலய கதவை உடைத்து மின்சாதன பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 18 Feb 2023 12:15 AM IST (Updated: 18 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாசரேத்தில் ஆலய கதவை உடைத்து மின்சாதன பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

தூத்துக்குடி

நாசரேத்:

நாசரேத் அருகே பிள்ளையன்மனையில் சி.எஸ்.ஐ தூய பரமேறுதலின் ஆலயம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஆலய ஆராதனைக்கு பின் கதவுகளை பூட்டி சென்றனர். பின்னர் நேற்று காலையில் வழக்கம் போல ஆலயத்தை திறப்பதற்காக ஆலய பணியாளர் ஜோதிராஜ் வந்துள்ளார். அப்போது ஆலயத்தின் கதவை மர்ம நபர்கள் கடப்பாரை கம்பியால் உடைத்து உள்ளே சென்றுள்ளது தெரிய வந்தது. இதனால் பதற்றம் அடைந்த ஜோதிராஜ், இதுகுறித்து குருவானவர் ஆல்வின் ரஞ்சித் குமார் மற்றும் ஆலய நிர்வாகிகளிடம் தகவல் கூறினார்.

உள்ளே சென்று பார்த்தபோது ஆலயத்தில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் திருட்டு போனது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story