ஈரோடு தியேட்டரில் யானை திரைப்படம் டிரெய்லர் வெளியீட்டு விழா்; நடிகர் அருண்விஜய் பங்கேற்பு


ஈரோடு தியேட்டரில் யானை திரைப்படம் டிரெய்லர் வெளியீட்டு விழா்; நடிகர் அருண்விஜய் பங்கேற்பு
x

ஈரோடு தியேட்டரில் நடந்த யானை திரைப்படம் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் அருண்விஜய் பங்கேற்றார்.

ஈரோடு

ஈரோடு

ஈரோடு தியேட்டரில் நடந்த யானை திரைப்படம் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் அருண்விஜய் பங்கேற்றார்.

நடிகர் அருண்விஜய்

இயக்குனர் ஹரியின் இயக்கத்தில், நடிகர் அருண்விஜய் நடிப்பில் யானை படம் உருவாகி உள்ளது. இந்த திரைப்படம் வருகிற 17-ந்தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி யானை படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஈரோட்டில் உள்ள ஒரு தியேட்டரில் நேற்று இரவு நடந்தது. அப்போது நடிகர் அருண் விஜய் தியேட்டருக்குள் நுழைந்து படம் பார்த்துக்கொண்டு இருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் அவர் ரசிகர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, 'யானை திரைப்படம் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமாக இருக்கும். கிராமத்து கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். இந்த படம் அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மேலும் இந்த திரைப்படம் விழிப்புணர்வு படமாகவும் இருக்கும். இதுவரை எனக்கு ஆதரவு கொடுத்தது போல் இந்த படத்துக்கும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.

சண்டை காட்சிகள்

அதைத்தொடர்ந்து நடிகர் அருண்விஜய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

இதுவரை பார்த்திராத அருண்விஜய்யை இந்த படத்தில் நீங்கள் பார்க்கலாம். வணிக ரீதியான படமாக எடுக்கப்பட்டு உள்ளது. சண்டை காட்சிகள் புதிதாக இருக்கும். எனது சினிமா வாழ்க்கையில் இந்த படம் ஒரு மைல் கல்லாக இருக்கும். அனைவரும் தியேட்டருக்கு வந்து இந்த படத்தை பார்க்க வேண்டும்' என்றார்.

அப்போது அவருடன் இயக்குனர் ஹரி இருந்தார்.


Next Story