அரிசியின் தரம் குறித்து வட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு
அரிசியின் தரம் குறித்து வட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு
தஞ்சாவூர்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு சொந்தமான வட்டார குடோன் பாபநாசத்தில் அமைந்துள்ளது. இந்த குடோனில் இருந்து பாபநாசம் தாலுகா முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை கோதுமை, பாமாயில் உட்பட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த குடோனில் பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரிசியின் தரம், இருப்பு நிலவரம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். ஆய்வின் போது வட்டார குடோன் தர கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராமச்சந்திரன், முதுநிலை ஆய்வாளர் அஜித்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story