கோவில் விழாக்களுக்கு தற்காலிகக்குழு அமைக்கக்கூடாது என சுற்றறிக்கை- மதுரை ஐகோர்ட்டில் அறநிலையத்துறை கமிஷனர் ஆஜராகி விளக்கம்


கோவில் விழாக்களுக்கு தற்காலிகக்குழு அமைக்கக்கூடாது என சுற்றறிக்கை- மதுரை ஐகோர்ட்டில் அறநிலையத்துறை கமிஷனர் ஆஜராகி விளக்கம்
x

கோவில் விழாக்களுக்கு தற்காலிகக்குழு அமைக்கக்கூடாது என சுற்றறிக்கை- மதுரை ஐகோர்ட்டில் அறநிலையத்துறை கமிஷனர் ஆஜராகி விளக்கம்

மதுரை


மதுரையைச் சேர்ந்த முருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அவமதிப்பு மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கிராமத்தில் முனியாண்டி சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்கள் அமைந்து உள்ளன. இந்த கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் இயங்கி வருகின்றன. இந்த கோவில் திருவிழாக்களில் எந்த தனி நபர் கமிட்டியும் அமைக்கக்கூடாது என்று ஏற்கனவே 2017-ம் ஆண்டில் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் அந்த உத்தரவை மீறி, தனிநபர் கமிட்டி அமைத்து திருவிழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. எனவே தனி நபர்கள் தற்காலிக கமிட்டி அமைத்து திருவிழா நடத்தாமல் இந்து சமய அறநிலையத்துறை நேரடியாக திருவிழாவை நடத்த உத்தரவிட வேண்டும். கோர்ட்டு உத்தரவை மீறியதற்காக உரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இதுசம்பந்தமாக விளக்கம் அளிக்க இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஆஜராகும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அறநிலையத்துறை கமிஷனர் முரளிதரன் ஆஜரானார்.

பின்னர் அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் செயல்படும் கோவில்களில் திருவிழாக்களுக்காக தற்காலிக குழு அமைப்பது குறித்து பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் சட்டப்படி விழாக்குழு அமைக்க விதிகள் அனுமதிக்கவில்லை. எனவே எதிர்காலங்களில் திருவிழாக்களுக்காக குழு அமைக்கக்கூடாது என அனைத்து கோவில் செயல் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், இந்த அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story