தர்மபுரி வள்ளலார் மைதானத்தில் தி கிரேட் இந்தியன் சர்க்கஸ்-நாளை கடைசி நாள்
தர்மபுரி:
உலக புகழ் பெற்ற தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் கடந்த 30 ஆண்டுகளில் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் நடத்தப்பட்டுள்ளது. இந்த சர்க்கஸ் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தர்மபுரி வள்ளலார் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) சர்க்கசின் கடைசி நாளாகும்.
இதுகுறித்து சர்க்கஸ் மேலாளர்கள் வில்சன், நாசர் ஆகியோர் கூறுகையில், எங்களது சர்க்கசில் ரஷ்யா, சீனா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் வல்லுனர்களால் பயிற்சி பெற்ற 100-க்கும் மேற்பட்ட சர்க்கஸ் கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு சாகசங்களை நிகழ்த்துகிறார்கள். குறிப்பாக அந்தரத்தில் பறக்கும் ரஷ்யன் அக்ரோ பெட், 80 அடி உயரத்தில் அழகிய பெண் நடனமாடும் ரஷ்யன் ரிங் பேலன்ஸ், பல வளையங்களை கால்களால் விளையாடும் விளையாட்டு, பெண்கள் கயிறு மூலம் சாகசம் புரிதல், எந்த சர்க்கசிலும் இடம் பெறாத உலக புகழ் பெற்ற கலைஞர்களின் ஜிம்னாஸ்டிக், பின்புறம் உள்ள பொருளை திரும்பி பார்க்காமல் முகம் பார்க்கும் கண்ணாடியின் உதவியுடன் குறி தவறாமல் துப்பாக்கியால் சுடுதல், மரண கூண்டில் கலைஞர்கள் செய்யும் சாகச நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. தினமும் மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி என 3 காட்சிகள் நடக்கிறது என்றனர்.