பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்


பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
x

ஆம்பூர் அருகே பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

ஆம்பூர்

ஆம்பூர் அருகே பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு

ஆம்பூர் அடுத்த நாச்சியார்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட புதூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் குட்டை அமைந்துள்ளது.

இந்த குட்டையின் அருகில் உள்ள நிலத்தை அதே பகுதியை சேர்ந்த காளிதாஸ் சில ஆண்டுகளுக்கு முன் வாங்கி பத்திரப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து இன்று நிலத்தை பொக்லைன் எந்திரத்தை கொண்டு சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஒருவர் போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்துள்ளதாகவும் அந்த நபர் வாங்கிய நிலத்தை முறையாக நில அளவையர்கள் அளக்க வேண்டும் என கூறி பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்தினர்.

பின்னர் குட்டையின் அருகில் உள்ள நிலம் தொடர்பான ஆவணங்களை சரிபார்த்த போலீசார் இதுகுறித்து தாசில்தார் மற்றும் மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலையில் குட்டை நிலத்தை நில அளவையர்கள் மூலம் அளந்து உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர்.

அதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story